Started in the name of "THE TRICHINOPOLY PINJRAPOLE"in the year 1907 with few cows, has grown today as Banyan tree-providing shelter for more than 100 cow, calves, bulls and buffaloes in this premises.
Friday, January 6, 2012
கோமாதா பூஜையின் மகிமைகள்
பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.
ஏனெனில்,பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலான மும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் என்றொரு தெய்வம் உண்டு.சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்தி (கிறிஸ்தவத்தில் ட்ரினிட்டி) இருக்கிறார்.
இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாக மனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்தி இருக்கிறாள்.இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,உயிர்கள் என அனைத்தையும் படைத்து,காத்து,ரட்சிப்பவளாக இருக்கிறாள்.இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன் வாழ்ந்து வருகிறாள்.
இதனாலேயே,முப்பத்துமுக்கோடி தேவர்களும்,நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்ட வசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றன.
கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்த ஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.(உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)
கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்ட சக்திகள் நெருங்காது.
முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும்;நீண்ட கால மனக்குறைகள் நீங்கிவிடும்.
கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும்,நம்பிக்கையும் முக்கியமாகும்.
கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும்,நம்பிக்கையும் முக்கியமாகும்.
முதலில் பசுவை அழைத்துவர வேண்டும்.அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள்,குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும்.பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.
பிறகு பசுவிற்கு புடவை அல்லது ரவிக்கை சாற்றி,அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.
நெய்விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.எடுத்துவிட்டு,விழுந்து வணங்க வேண்டும்.கோமாதா 108 போற்றியை பக்தியுடன்,ஒருவர் மனதை ஒருமுகப்படுத்திச் சொல்ல வேண்டும்.(இடையில் நிறுத்தக்கூடாது).மற்றவர்கள் “போற்றி”, “ஓம்” என சொல்லிட வேண்டும்.
108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும்.பிறகு,3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.
இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும்,பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.
ஆகவே, இந்த கோ பூஜை செய்து வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்து, மனத்தில் உள்ள அனைத்துக் கவலைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் மகிழ்ச்சியாக வாழ கோமாதா நம்மை ஆசிர்வாதிப்பாள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பாரதத்தில் வேதகாலம் தொடங்கி , இன்று வரை , பசுவின் ( கோமாதாவின் ) பெருமையையும் , அதனைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் , பசு இனத்தை ...
No comments:
Post a Comment