Showing posts with label #Save Cows #Goseva #Gauraksha. Show all posts
Showing posts with label #Save Cows #Goseva #Gauraksha. Show all posts

Wednesday, September 22, 2021

தாங்களும் குடும்பத்துடன் கோசாலை பார்வையிட வேண்டுகிறோம்

ஒவ்வொருவரும் பசுக்களை பாதுகாப்பது அல்லது வளர்ப்பது மிகவும் சிரமம், காரணம் விலைவாசி உயர்வு, தீவனப் பற்றாக்குறை, மேய்ச்சலுக்கு இடமின்மை, நேரமின்மை ஆகும். ஆனால் கூட்டாக கோசாலை அமைத்து பாதுகாத்து வந்தால் நமக்கு நல்ல தண்ணீர் கலக்காத பால் - தயிர் கிடைக்க வழிவகுக்கிறது. நம் பணமும் முழுமையாக பசுவுக்கு போய் சேர்கிறது. மனநிம்மதியும் கிடைக்கிறது. தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கி அளிப்பதால் கிரக தோஷங்கள் விலகுவதாக புராணங்கள் கூறுகின்றன. மனநிம்மதி அடைகிறது. இவ்வளவுக்கும் மேல் நமக்கு நம் சந்ததியினருக்கு பெரிய புண்ணியத்தை நாம் செய்கின்றோம்.
அனைத்து வரங்களையும், செல்வங்களையும், ஆரோக்கியத்தையும், மனநிம்மதியும் பெற எளிய வழி தானம் செய்வது மட்டுமே. பசுக்களுக்கு உணவளித்தால் தாங்கள் புண்ணியத்தின் (தர்மத்தின்) பலனை முழுமையாக பெறுகிறீர்கள். எங்கள் திருச்சிராப்பள்ளி பின்ஜராபோல் டிரஸ்டின் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு உதவி செய்திட உங்கள் அன்பையும் பொருட்களை அனுப்பி உதவி செய்ய வேண்டுகின்றோம் தாங்களின் நன்கொடையால் பயன் பெறுவது நமது தாயான பசுக்களின் ஆசியால் தாங்கள் பூரண ஆயுளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அனைத்து வளங்களையும் பெறுவீர்கள்.

Adopt a Cow